Posts

Showing posts with the label உடல்நலம்

நகம் சொல்லும் உடல்நலம்

நகங்கள் கெரட்டின் என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே, நகமும் அமைந்திருக்கிறது. விரல்கள் மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை . கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும். ஆள் காட்டி விரல் நகம், சுண்டு விரல் நகத்தை விட மிக வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு சராசரியாக, 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். கைவிரல் நகங்கள் விழுந்து, புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். ஒருவருடைய வயது, அவர் ஆணா- பெண்ணா, அவரது அன்றாட உழைப்பு, சாப்பாடு விஷயங்கள், பரம்பரை மற்றும் பருவ காலங்களைப் பொறுத்தே, நகங்கள் வளரும் நீளமும் வேகமும் அமையும். மனிதன் இறந்த பிறகு, நகத்திற்கு கீழுள்ள தோலிலும், தசையிலும் உள்ள தண்ணீர் குறைந்து விடும்.  அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும். தோல் சுருங்கி இறுகி விடு...

சளி பிரச்சனைக்கு சரியான தீர்வு

 ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான சூட்டில் உள்ள வெந்நீருடன் சிறிது தேன்  கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சனை நீங்கும் . சளி வராமல் இருக்க பாகற்காயின் வேரை விழுதாக அரைத்து , ஒரு தேக்கரண்டி அளவு அதனை எடுத்து கொண்டு அத்துடன் சம அளவு தேன்  அல்லது துளசி சாறை சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட சளி வராமல் இருக்கும் . நெஞ்சு சளி உள்ளவர்கள் ரோஜாப் பூ இதழ்களை பாலில் தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நிங்கும் மற்றும் இரத்த விருத்திக்கு துணை புரியும் . பூண்டு  ஒரு பத்து பற்கள் எடுத்து நன்றாக நசுக்கி , 5 மிளகு எடுத்து நசுக்கி ,ஒரு க்ளாஸ்  பாலில் போட்டு ,ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து சுண்டக்காய்ச்சி அந்தப்பாலை மட்டும் குழந்தைக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி நீங்கும். ஏலக்காயை பொடி  செய்து அதனை காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்பு சளி குணமாகும். தூதுவளை இலையை 10 எடுத்து நல்லெண்ணெய் அல்லது வெண்ணெயில் வதக்கி வெறும் வயிற்றில் காலை நேரத்தில் மூன்று நாட்கள் தொடர்து சாப்பிட்டு வர குளிர்காலத்தில் ஏற்படும் சளிப...

சிறுநீரக கல் வராமல் இருக்க

சிறுநீரக கல் வராமல் இருக்க வாரம் ஒரு முறை வாழைப்பூ சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். துளசி இலையின் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து ஆறு நாட்கள் விடாமல் உட்கொண்டால் சிறுநீரகக் கல் உடையும் . வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக்கி,ஜூஸ் ஆக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் ,சிறுநீர் பாதையில்  உள்ள கிருமித்தொற்று ஆகியவை நீங்கும்.

இருதயம் பலமடைய இயற்கை மருத்துவம்!

இருதயம் பலவீனம் உள்ளவர்கள், அடிக்கடி மார்பு வலியால் அவதி படுபவர்கள் செம்பருத்திப்பூவை தண்ணிரில் போட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வர இருதயம் பலமடையும். தினமும் 2 மிளகை தவறாமல் சாப்பிட்டு வந்தால் இருதய நோய் வரவே வராது.

ஆண்மை பெருக அற்புத வழிகள்!

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர ஆண்மை பெருகும். அரசம் பழம் , அரசமர வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் போட்டு குடித்தால் தாது விருத்தியாகும். முருங்கையின் முற்றிய விதைகளை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம் .மேலும் நரம்பு தளர்வு,உடல் சோர்வு , இரத்த சோகை முதலியவற்றை குணப்படுத்தும் . புளிய விதையின் மேல்  உள்ள ஓட்டை காய வைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரக நோய்கள் நீங்கும்.இதன் பருப்பு தாது விருத்திக்கு உதவி புரியும்.

தொண்டைப்புண் குணமாக

கடுகுப் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டைப்புண் விரைவில்   ஆறிவிடும் 

சருமம் ஜொலி ஜொலிக்க..

தாமரைப்பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தல் படை மற்றும் புள்ளிகள் நீங்கும்.சருமம் ஜொலிஜொலிக்கும் . 

நரம்பு தளர்சிக்கு நாட்டு வைத்தியம்!

கனிந்தும் கனியாமல் உள்ள வாழைப்பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி அதனுடன் பாதாம் பருப்பு ,பேரிச்சைப்பழம் ஆகியவற்றை துண்டு துண்டுகளாக நறுக்கி போடவும். இவற்றுடன் தேன் கலந்து வைத்து கொள்ளவும் .இதை தினமும் காலை மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ,கை கால் நடுக்கம் ஆகியவை நீங்கும்.மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

தழும்புகள் மறைய தரமான வைத்திய முறைகள்!

எலுமிச்சை சாற்றை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவினால் அவை இரண்டிலும் உள்ள ப்ளிச்சிங் தன்மையினால் தழும்புகள் மறையும். கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு சருமம் பொலிவோடு இருக்கும்.  

பல் பள பளக்க பயனுள்ள தகவல்கள்!

எலுமிச்சை பழத்தோலை காய வைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும் , தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் பளபளவென வருவதோடு வாய் துர்நாற்றமும் நீங்கி விடும். புங்கம் குச்சிகளைக்  கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பல் வலிமை அடையும்.

உடல் வலுப்பெற உன்னத குறிப்புகள்!

சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை நன்கு நீர்விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இழைத்த உடல் பருக்கும். கொண்டைக்கடலை 10 எடுத்து  சுத்தமான நீரில் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைப்பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்து வர மெலிந்த உடல் தேறும் . பச்சைப்பயிரை ஊற வைத்து முளைக்கட்டிய பின்னர் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். தேவையான அளவு பேரீச்சைப்பழம் ,தேன்  இவற்றோடு கற்கண்டு சேர்த்து லேகியப்பதமாக செய்து வைத்துகொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும். முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் ,மிளகு ,பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் பலம் பெரும். உடலை தேற்றுவதற்கு இது ஒரு சிறந்த டானிக். கற்கண்டை வெண்ணையுடன் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும். முட்டை ,பால்,வெண்ணை,உருளைக்கிழங்கு ,கோழி மற்றும் மீன் இறைச்சி ,சோளம் , காரட்,மற்றும் வாழைப்பழ...

வாய்ப்புண் குணமாக வகையான வைத்தியம்!

பப்பாளிக்காயின்  பாலை வாய்ப்புண் மற்றும் புண்கள் மேல் பூச குணமாகும். எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில்  கலந்து ,அந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் குறையும்.

நினைவாற்றல் கூட நல்ல மருத்துவம் !

பாதம் பருப்பு ,வெண்டைக்காய் மற்றும் தக்காளி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூளையின் நினைவாற்றல் கூடும்.

சர்க்கரை நோய்க்கு சரியான வைத்தியம்

வேப்பிலை, கருவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் காய வைத்து பொடியாக்கி , அதனை தினமும் கலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் . அருகம்புல்லை காய வைத்து பொடி செய்து மோரில் கலக்கி தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். 

வாந்தி வராமலிருக்க என்ன செய்யலாம்?

சிறிது இஞ்சித்துண்டை உப்புடன் சேர்த்து சாப்பிட எப்படிப்பட்ட குமட்டலும் உடனே நின்று  விடும்

இரத்த விருத்திக்கு இயற்கை வைத்தியம்!

செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தி ஆகும் . பீட்ரூடினை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தி அடையும். திராச்சை பழச்சாறினை தினமும் அருந்தி வர உடம்பில் உள்ள இரத்தமானது சுத்தபடுத்தப்படுகிறது   இளம் பிரண்டையை நறுக்கி நெய் விட்டு வதக்கி நன்கு அரைத்து காலை மாலை இரு வேளையும் நெல்லிக்காய் அளவிற்கு ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) உண்டு வந்தால்  இரத்த மூலமானது படிப்படியாக குணமாகும்.

அல்சர் குணமடைய அற்புத வைத்தியம்!

தினமும் ஒரு டம்ளர் திராச்சை பழச்சாறு குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமடையும் .  ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் என்பது வரவே வராது.

வயிற்று உபாதைகளுக்கு மருத்துவம்

வில்வப்பழத்தின் சதைப்பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும் . வாழைத்தண்டினை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் குடலில் சிக்கியுள்ள முடி மற்றும் நஞ்சு வெளியேறும். வயிற்றுவலி தீடிரென ஏற்படுமாயின் இரண்டு ,மூன்று வெள்ளைப்பூண்டு பற்களை நன்றாக மென்று விழுங்கினால் வயிற்றுவலி குறையும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்வதினால் ஆறாத வயிற்று புண் ஆறும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்

தசைகள் வலுப்பெற டிப்ஸ்

அவுலை  ( அவுல் ) பாலில் கலந்து சாப்பிடும் போது தசைகள் வலுப்பெறும் மற்றும் உடலின் திசுக்களுக்கும் ஊட்டம் கிடைக்கும். பனை வெல்லத்தினை அடிக்கடி உண்டு வந்தால் உடல் பலவினமானது குறையும்.  சுக்கு , மிளகு ,திப்பிலி மற்றும் சீரகம்  ஆகியவற்றை பொடி  செய்து  தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு , கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒரு முறை தடுப்பு பொருளாக இதனை சாப்பிடலாம்.

மூக்கடைப்பு நீங்க மருத்துவம்

சளி பிடித்திருக்கும் நேரத்தில் மூக்கு  அடைத்து கொண்டால்  வெங்காயத்தை சாறு பிழிந்து ஒவ்வொரு துளையிலும் ஒரு சொட்டு விட்டால் மூக்கடைப்பு சரியாகும்.