நாயுடன் யுவதிக்கு திருமணம்
இந்தியாவில் யுவதி ஒருவரை நாயொன்றுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள மிகவும் பின்தள்ளப்பட்ட கிராமமொன்றில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
மங்கலி முண்ட என்ற 18 வயது யுவதிக்கே இவ்வாறு நாயுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் யுவதி அதிஷ்டமற்றவள் எனவும் இவ் யுவதியை திருமணம் செய்யும் ஆண், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வார் என்றும் மேற்படி கிராமத்தின் பூசகர் ஒருவர் யுவதியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாயை முதலில் திருமணம் செய்தால் கெட்ட சகுணங்கள் நீங்கி நன்மை பிறக்கும் என்று ஊரார் கூறியதை கேட்டு மேற்படி யுவதியின் பெற்றோர் நாய்க்கு யுவதியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
வழமையான திருமண நிகழ்வுகளை போன்று இத்திருமணமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சேரு என்றழைக்கப்படும் நாயை திருமணத்துக்காக அலங்கரித்து காரில் அழைத்து வருகின்றனர். மணப்பெண்ணை அலங்கரித்து திருமண பந்தலுக்கு அழைத்து வருகின்றனர்.
பின்னர் அவ்வூர் வழக்கப்படி திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக திருமணம் நடத்தி முடிக்கப்படுகிறது.
'நாயை திருமணம் செய்தது பிடிக்கவில்லை. ஆனால், நன்மை கிடைக்கும் என்பதற்காக திருமணம் செய்தேன். இதற்கு பிறகு நல்ல ஒரு ஆணை தெரிவுசெய்து மணப்பேன்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment